பயிர் பாதுகாப்பு :: கேழ்வரகு பயிரைத் தாக்கும் நோய்கள்

கருகல் நோய்: மெலனோஸிசியம் இலியஸினிஸ
தாக்குதலின் அறிகுறிகள்:
  • பயிர்களில் தானியங்கள் உருவாகும் நேரத்தின்போது தோன்றும்.
  • கருகல் நோய் தாக்கப்பட்ட  தானியங்கள் சிதறிக் காணப்படும்.
  • பாதிக்கப்பட்ட தானியங்கள் சாதாரண தானியங்கள் விட பெரியதாகவும் பித்தப்பை போன்றும்  காணப்படும்.
  • தானியங்கள் பச்சை நிறத்தில் ஆரம்ப கட்டங்களில் வீக்கமடைந்தும் காணப்படும்.
  • வித்துக்கூடானது பச்சை நிறத்திலிருந்து இளஞ்சிவப்பாகவும், இறுதியாக அழுக்கு கருப்பு நிறமாக  மாறிவிடும்.
       
  இளஞ்சிவப்பு தானியங்கள்   அழுக்கு கருப்பு தானியங்கள்   தாக்கப்பட்ட பயிர்  

நோய்க்காரணி:

  • வித்திகள்  கோள வடிவிலும் மற்றும் விட்டம் 7 முதல் 11 மைக்ரான் உடையது
  • எபிஸ்ப்போர் அடர்த்தியாகவும் மற்றும் ஒரு தோராயமானதாக  மேற்பரப்பு காணப்படும்.
  • வித்திகள் நீரில் எளிதில் முளைக்கிறது. தடுப்பு சுவருடைய பூசண இழையை உற்பத்தி செய்கிறது.
  • கோனிடியங்கள் உருவாகின்றன.

கட்டுப்படுத்தும் முறை:

  • எதிர்ப்பு இரகங்களைப் பயன்படுத்தி நோய் தாக்குதைல குறைக்கலாம்.
       
  கோள வடிவ வித்திகள      
Content Validator: Dr. T.Raguchandar, Professor (Plant Pathology), TNAU, Coimbatore-641003
Thanks to Dr.M.N.Budhar, Professor and Head, Regional Research Station, Paiyur- 65112
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015